260 likes | 461 Vues
பல்கலைக்கழகத் தகவலியல் மையம் பாரதிதாசன் பல்கலைக்கழகம். தகவலியல் மையம் (Informatics Centre). பல்கலைக்கழகத் தகவலியல் மையம், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான உயரிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பையும் (technological infrastructure) சேவைகளையும் வழங்கி வருகிறது.
E N D
பல்கலைக்கழகத் தகவலியல் மையம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
தகவலியல் மையம் (Informatics Centre) • பல்கலைக்கழகத் தகவலியல் மையம், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான உயரிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பையும் (technological infrastructure) சேவைகளையும் வழங்கி வருகிறது. • இணையதளம், மின்னஞ்சல், தகவல் தளங்கள், மின்னணு நூலகம் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் வழங்கிகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட கணினிகளைக் கொண்ட வலையமைப்பு ஆகியவற்றை இரு வளாகங்களிலும் இம்மையம் நிறுவிப் பராமரித்து வருகிறது.
எது இணையத்தமிழ் ? • தேமதுரத் தமிழ்மொழியில், இணையத்தமிழ், தனித்தமிழ், தூயதமிழ், பழந்தமிழென தனித்தனியாகப் பிரித்துச் சொல்ல ஏதுவாக பிரிவுகள் ஏதுமில்லை. எல்லாமே செம்மொழியாம் நம்மொழிதான். வழக்கிலே பலவாறாக பயன்பாட்டாளர்கள் பிரித்துப் பேசுகின்றனர் அவ்வளவே! • இவ்வனைத்தும் தமிழன்பர்கள் அனைவரும், பலநிலைகளில் இலக்கண, இலக்கிய சுத்தமாக அறிந்திருக்கக் கூடியவையே. • ஆனால் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இணையத்தமிழென்று புதிதாக கிளம்பியிருப்பது எது?
எது இணையத்தமிழ் ? • எழுதுகோல், தாள், அச்சு இயந்திரங்கள் துணைகொண்டு நாள்/வார/மாத/ஆண்டு இதழ்கள், தொலைக்காட்சி ஆகியன வழியே தமிழைச் சுவைத்தோம் • இன்றோ கணினியும், இணையத் தொடர்பும், இணையதளங்களும், யூனிகோடு (ஒருங்குறி) எழுத்துச் சீர்மையும், வலைக்குடில்கள் எனப்படும் வலைப்பதிவுகளும் கோலோச்சும் காலகட்டத்திலும்,தமிழ் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது
வரலாறும் வளர்ச்சியும் • 1946 - பெருங் கணினிகள் • 1976 - மேசைக் கணினிகள் - தனிநபர் கணினிகள் (Personal Computers) • தகவல் பரிமாற்றம் - பிணையம் (Network) • 1979 - பாதுகாப்புத் துறை - ஆர்பா பிணையம் (ARPA Network) • 1980 – இணையம் (INTERNET) – சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் • 1990 - இணைய வலையமைப்பு (Web) • வையக விரிவு வலை (WWW) • பொது மொழி (HTML)
கணினித் தமிழ் • தகவல் மற்றும் கோப்புகள் பரிமாற்றம், மின்னஞ்சல், மின்வணிகம், மின்வழிக்கல்வி….. • கணினியின் செயல்பாடு மின்பொறிகள் மற்றும் இயங்கு செயலிகள் (Operating System) ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டவை • இணையத்தின் செயல்பாடுகளும் ஆங்கிலம் சார்ந்தே அமைந்தன • ஜெர்மன், பிரஞ்சு, ஜப்பானியர்கள் மற்றும் சீனர்கள் தங்கள் தாய்மொழியைக் கணினியில் பயன்படுத்தத் துவங்கினர்
தொடக்க முயற்சிகள் • உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் - தமிழை கணினியில்/இணையத்தில் புகுத்த முற்பட்டனர் • தமிழர்களின் மொழி, இலக்கியம், வரலாறு, கலை, பண்பாடு ஆகியவற்றை தமிழ் இணையத்தில் இடவும் பகிரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
எழுத்துரு (Font) • ASCII (0,1) • Romanized form (ஆங்கில வரிவடிவ முறை) • ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies, Chemmanchery, Chennai) & கொலோன் பல்கலைக்கழகம் • பெர்க்லி (Berkely) பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் - தமிழ் லேசர் • ஆதமி, பல்லாடம், மயிலை, அஞ்சல், அமுதம் • CDAC – ISCII (Indian Script Code) • திரு. ஆண்டோபீட்டர்(அமுதம்)
இடர்பாடுகள் • பல்வேறு குறியீட்டு முறைகள் - இடர்கள் • ஒரே மொழி, பல்வேறு வடிவங்களில் இணையத்தில் வலம்வரத் துவங்கியது • விசைப் பலகை (Key board) - புதிய வடிவங்கள் - சிக்கல்கள் • சொற்செயலிகள் (word processors)- முரசு அஞ்சல், பொன்மொழி, துணைவன், கம்பன், நளினம் • எழுத்துரு பதிவிறக்கம் (font download) • தேடல் இயந்திரங்களில் தமிழைப் பயன்படுத்த முடியாத நிலை (Tamil search terms)
இணையதளங்கள் • ஜார்ஜ் ஹார்ட் , தாமஸ் மால்டன் - பொங்கல் 2000 • முனைவர் கல்யாணசுந்தரம் - மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் – 1998 • வாசு அரங்கநாதன் - பென்சிவேனியா பல்கலை.
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் • முதல் மாநாடு:தமிழும் கணிப்பொறியும் – 1994 • தமிழ் இணையம் - 1997 - தரப்படுத்தும் முயற்சிகள் • Project Madurai’s TSCII – CDAC’s ISCII • தமிழ் இணையம் - 1999 - TAB/TAM • இணைய வழிக் கல்வி (Virtual University) • http://www.tamilvu.org • தமிழக அரசால் தொடங்கப்பட்ட நிறுவனம் • இலக்கிய நூல்கள், அகராதிகள், பண்பாட்டுக் காட்சிகள், கலைச் சொற்கள்….
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் • மின் நூலகம் http://www.tamilvu.org/library/libindex.htm
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) • இலக்கிய நூல்கள், அகராதிகள், பண்பாட்டுக் காட்சிகள், கலைச் சொற்கள்…. • www.kanithmizh.in • தமிழ் மென்பொருள்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வழிவகைகள் செய்தல் • INFITT (International Forum for Information Technology in Tamil) • உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) • UNICODE & TACE-16
ஒருங்குறி (Unicode) • இணையத்திற்கு ஏற்ற ஒரு தரமாக யுனிகோட் இருக்கவேண்டும் - INFITT • தமிழ் மொழிச் செயலாக்கம் (NLP), பதிப்பித்தல் (Publishing), கணினி மொழிகள் உருவாக்கம்ஆகியவற்றுக்கு யுனிகோட் ஏற்றதல்ல • தமிழக அரசு TACE-16 என்கிற தரத்தையும் பரிந்துரை செய்கிறது
தொடரும் முயற்சிகள் • தமிழ் இணையம் - 2002 • தமிழ் மரபு அறக்கட்டளை • தமிழ் இணையம் - 2010 - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு • தமிழ் இணையம் - 2012 - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் டிசம்பர் 28 முதல் 30 வரை
இணையம் தருகிற ஊக்கம் • ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் யாப்பருங்கலக் காரிகை உரையின் 1940-ஆம் ஆண்டின் பதிப்பு • தேசிகமாலையெனும் நூல் போன இடந் தெரியவில்லை • யாப்பருங்கலக் காரிகை விருத்தியின் பதிப்போ மிகக் குறைந்த அளவிலேயே நூலகங்களில் இருப்பதாகக் கேள்வி. • இணையத்தில் வெளியாகும் படைப்புகள் காலத்தால் அழியாத காவியமாக நிற்கக் கூடியவை
இணையம் தருகிற ஊக்கம் • தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம் இன்றிருக்கும் அனைத்து சங்க இலக்கியங்களும், ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்களும், 15 ஆம் நூற்றாண்டிற்கு பின் வந்த இலக்கியங்களும், இன்னும் இன்றைய இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கியங்களும் வலையேற்றம் செய்யப்பட்டு, கடற்கோளோ, நெருப்போ, நிலநடுக்கமோ, எதுவும் அண்ட முடியாத வடிவத்தில் பாதுகாக்கப் பட்டுள்ளன.
இணையம் தருகிற ஊக்கம் • தேடு தளங்களில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்தே பக்கங்களை, விவரங்களை, தளங்களை தேடும் வசதியினை அடைந்திருக்கிறோம். • எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் பதித்துக் கொள்ளும் தொல்லைகள் கூட குறைந்து விட்டன. • சிகாகோ பல்கலைக்கழகம் - கோட்டையூரில் வாழ்ந்த ரோஜா முத்தையா - பல அரிய நூல்கள்
சுவடிக்காட்சியகம் Digital Manuscript Gallery • பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் தமிழ்ச் சுவடிகளையும் அரிய நூல்களையும் மின் வடிவில் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம் • அறிய வேண்டிய அரிய நூல்கள் • தொல்காப்பியம் (1847-48)
Google Transliteration & Translation • http://www.google.com/transliterate/Tamil • http://translate.google.com/#en/ta/ • IETF (Internet Engineering Task Force) • யாஹூ. வணிகம் • NHM Writer
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் • தொடர்புக்கு: inf@bdu.ac.in • நன்றி! • இணைப்புகள்